விழித்தெழு தமிழா
**********
தமிழா! தமிழா!
விழித்தெழு தமிழா!
விடியலில் முளைத்திடு தமிழா!
நிறம் பார்க்காத நிழலாயிரு
நிசம் மறைக்காத நீராயிரு
முண்டி நிமிரும் துணிச்சாலாயிரு
மூச்சு தரும் நம்பிக்கையா இரு
தூண்டி ஒளிரும் தீபமாயிரு
துவசம் தவிர்க்கும் அறமாயிரு
ஆழ்கடலை ஈர்க்கும் முத்தாயிரு
அமைதி விதைக்கும் அலையாயிரு
ஆணவத்தை கொல்லும் அகிம்சையாயிரு
வன்மமில்லாத வரைப்படாமாயிரு
உயிரை உயிர்பித்திடும் மண்ணாயிரு
சுவாசத்தை புதுப்பித்திடும் மரமாயிரு
எண்ணத்தில் அகண்ட வானாமாயிரு
எழுச்சியில் திரண்ட மேகமாயிரு
புறம் பேசாத அன்போடிரு
பொய்யை புறம் தள்ளும் உண்மையாயிரு
தரணி போற்றிடும் தமிழா!
விழித்தெழு தமிழா!
விடியலில் முளைத்திடு தமிழா!
தமிழ் கரம் பிடித்திடு தமிழா!
சிவமணி
வத்தலக்குண்டு