அழைப்பிதழ் வாசலை கோலமிடும்
முகமறியா உறவுகள் நட்பு சரம் தொடுக்கும்
நெருங்கியே இருக்கத் துடிக்கும் உறவுகள்
மதிப்பு மரியாதைகள் அலங்காரம் செய்யும்
தலைமை தாங்க அங்கீகாரம் கிடைக்கும்
அறிவியல் தொழில்நுட்பம் ஆட்டி படிக்கும்
சமூக அந்தஸ்து முலாம் பூசப்படும்
நேர்த்தியான பொருள் தேடி-மனம் அலை பாயும்
பணம் ஒரு மாயையோ?
வாழ்க்கையை முறைப்படி விலைக்கு வாங்கி நானில்லாமல்
எதுவும் இல்லை- என உணர்த்தி கொண்டிருக்க
பணம் செல்லும்
பாதையில் பாதங்கள்
சிவமணி
வத்தலக்குண்டு
Semma