உண்மையாய் இருந்த
உறவுகள் என்னை
புறக்கணித்து
நிற்கும் வேளை

ஆழமான காதல்
பலம் இழந்ததாய்
அறியும் சனம்

யார் அழைத்தால்
ஓடி ஓடி உதவினோமோ
அவர் உண்மை முகம்
பார்த்த வினாடி

அன்பு அன்பு என
சுற்றி திறந்த
அன்பு
உதாசீன படுத்தப்பட்ட
தருணம்

எல்லாம்
இருப்பது போல்
இருந்தும்
இல்லாதது போல
உணரும் தனிமைக்கும்
பெயர் அனாதையோ ?

சிவமணி
வத்தலக்குண்டு